ஆம்பூர் : ஆய்வு எனச் சொல்லி பாஸ்ட்ஃபுட் கடை உணவுப்பொருட்களை தூக்கி எறிந்த டாஸ்மாக் அதிகாரி

ஆம்பூர் : ஆய்வு எனச் சொல்லி பாஸ்ட்ஃபுட் கடை உணவுப்பொருட்களை தூக்கி எறிந்த டாஸ்மாக் அதிகாரி
ஆம்பூர் : ஆய்வு எனச் சொல்லி பாஸ்ட்ஃபுட் கடை உணவுப்பொருட்களை தூக்கி எறிந்த டாஸ்மாக் அதிகாரி

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாஸ்ட்ஃபுட் கடையில் உள்நுழைந்த சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர், ஆய்வு நடத்துவதாக கூறி பொருட்களை தூக்கி எறிந்து கடையை பூட்டி சென்ற பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலை பகுதியில் உள்ளது ஏ-1 பாஸ்ட்புட் கடை. இதை நடத்தி வருபவர் முதசீர். இவர் தனது கடையில் பாஸ்ட்ஃபுட் மற்றும் பரோட்டா, சிக்கன் 65 போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென கடையில் நுழைந்தவர்கள், நாங்கள் அதிகாரிகள் என்றும் ஆய்வு நடத்த வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதன்பின்னர் கடையின் உரிமையாளர் அருகே சென்ற ஒருவர் அங்கிருந்த சிக்கன் 65யை தூக்கி வீசி எறிந்து அருகிலிருந்த பொருட்களை கீழே தள்ளியுள்ளார். பின்னர் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு கடையைப் பூட்டி சாவியை எடுத்து சென்று உள்ளனர். இந்த காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் முதசீர் புகார் கொடுத்ததின் பேரில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் முதசீர் தெரிவிக்கையில், "நாங்கள் டாஸ்மார்க் கடை அருகேதான் கடை நடத்தி வருகிறோம். ஆனால் எங்கள் கடை முழுவதும் வேலியால் அடைக்கப்பட்டு நாங்கள் யாரையும் இங்கு உணவருந்த விடுவதில்லை. நாங்கள் பார்சல் மட்டுமே வழங்கி வருகிறோம். இந்நிலையில் நேற்று வந்தவர்கள் என் கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசி எறிந்துவிட்டு, பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் உள்ளே இருக்கும் உணவு பொருட்கள் அனைத்தும் தற்போது கெட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் சாவியை கொடுத்தால் அதை அப்புறப்படுத்துவோம்" என்று தெரிவித்தார். இதுகுறித்து சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர் ராஜ்குமார் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் செல்போன் என்னை எடுக்கவில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com