\
ஆம்புலன்ஸிற்கு தனி ரூட்! பரிசீலிக்க உத்தரவு

ஆம்புலன்ஸிற்கு தனி ரூட்! பரிசீலிக்க உத்தரவு

ஆம்புலன்ஸிற்கு தனி ரூட்! பரிசீலிக்க உத்தரவு
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸிற்கு தனி வழி அமைப்பது தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் நிகழும்போது உரிய நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை பரிசீலித்து 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com