\
குற்றால அருவியில் குளிக்க அனுமதி

குற்றால அருவியில் குளிக்க அனுமதி

குற்றால அருவியில் குளிக்க அனுமதி
Published on

குற்றாலம் அருவியில் நீடித்த வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட‌டது. இதையடுத்து மெயினருவியில் நேற்று காலை முதல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com