தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி
Published on

மக்களுக்கு குறைந்த விலையில் தேவைக்கேற்ப மணல் கிடைக்கும் வகையில், புதிதாக 7 மணல் குவாரிகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் ஆற்றங்கரைக்கு‌அருகில் அரசு மணல் விற்பனை நிலையங்கள் அமைத்து மணல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணலுக்கான விற்பனை தொகையை வங்கி வரைவோலையாக மட்டுமே செலுத்தும் தற்போதைய நடைமுறைக்கு பதிலாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. செயற்கை மணல் பயன்பாட்டை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படடுவருவதாகவும், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com