இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு ஒதுக்கக்கோரி மனு
ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ் அணியினர் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியை ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. இதில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை அளித்துள்ளார். அதில், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி, இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மனுவில் மதுசூதனன் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கையெழுத்திட்டுள்ளனர்.