\
2021-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு: வானதி சீனிவாசன்

2021-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு: வானதி சீனிவாசன்

2021-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு: வானதி சீனிவாசன்
Published on

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் தலைமை இன்று அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும், ஆட்சியில் பாஜகவும் பங்குபெறும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக வானதி சீனிவாசன் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். மேலும் ஆட்சியில் பாஜக பங்குபெறும், அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது”என அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்த நிலையில் இவர் இந்த கருத்தை தெரிவித்துள்ள அரசியல் அதிர்வலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com