கும்பகோணம் மகாமக குளம்
கும்பகோணம் மகாமக குளம்web

கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர்? அறநிலையத் துறை விளக்கம்!

கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அறநிலையத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
Published on
Summary

கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். எம்எல்ஏ அன்பழகன் குளத்தை பார்வையிட்டு, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டன.

கும்பகோணம் மகாமக குளத்தில் கழிவுநீர் கலந்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்த கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், குளத்தை பார்வையிட்டார். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குளத்தில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டன.

கும்பகோணம் மகாமகம்
கும்பகோணம் மகாமகம்

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, மகாமகம் குளத்துக்கு அரசலாற்றில் இருந்துபோர்வெல் மூலம் வழக்கமாக தண்ணீர்கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.நீண்ட நாட்களுக்கு பின் அரசலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டதால், நீர்வழிப்பாதையில் இருந்த கழிவுகள் குளத்துக்கு வந்தடைந்ததாகவும், இப்போது வரும் நீர்சுத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கும்பகோணம் மகாமக குளம்
சிலிண்டர் தட்டுப்பாடு| உணவகங்கள் மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை.. தமிழக அரசு 8 அறிவிப்புகள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com