"இதற்கெல்லாம் முதல்வரின் திறமையே காரணம்" - புகழ்ந்து பேசிய அமைச்சர் நாசர்

"இதற்கெல்லாம் முதல்வரின் திறமையே காரணம்" - புகழ்ந்து பேசிய அமைச்சர் நாசர்
"இதற்கெல்லாம் முதல்வரின் திறமையே காரணம்" - புகழ்ந்து பேசிய அமைச்சர் நாசர்

அண்ணா கலைஞர் காலத்தில் கிடைக்காத ஓட்டுகள் தற்போது கிடைக்கிறது என்றால் அதற்கு மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையே காரணம் என் அமைச்சர் நாசர் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூர் திமுக சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு; 1000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்துக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு நல்ல திட்டங்களை இயற்றி வருகிறார். 2800 கோடி சுழல் நிதியை பெண்களுக்கு கொடுத்த பெருமை மு.க.ஸ்டாலினையே சாரும், கூட்டுறவு கடன் ரத்து, 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது ஸ்டாலினின் பெரும் சாதனை.

அண்ணா கலைஞர் காலத்தில் கிடைக்காத ஓட்டுகள் தற்போது கிடைக்கிறது என்றால் அது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையே காரணம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இந்தியாவிற்கும், இந்திய ஒருமைபாட்டிற்கும் பாதுகாப்பு அரண் திராவிட முன்னேற்ற கழகம், அண்ணாமலை, ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரின் எண்ணமும் திமுகவை வீழ்த்துவதாகவே உள்ளது, இன்று மாநிலங்களுள் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, முதல்வருக்கெல்லாம் முதல்வராக ஸ்டாலின் திகழ்வதால், வட இந்திய தலைவர்கள் தங்களுக்கு வழிகாட்டும்படி ஸ்டாலினிடம் கோருகின்றனர் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com