திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அனுமதி

திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அனுமதி

திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அனுமதி
Published on

தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் நூறு சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் கணிசமாக குறைந்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com