நிவர் புயல்: முன்னெச்சரிக்கையுடன் விழுப்புரம் மாவட்டம்..!

நிவர் புயல்: முன்னெச்சரிக்கையுடன் விழுப்புரம் மாவட்டம்..!
நிவர் புயல்:  முன்னெச்சரிக்கையுடன் விழுப்புரம் மாவட்டம்..!

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன மற்றும் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை.

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து கடைகளும், காய்கறி அங்காடிகள் ஆகியவை முழுமையாக மூடப்பட்டன. மேலும் பேருந்து இயக்கம் நேற்று பிற்பகலில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. புயல் தாக்கும் ஏற்படும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்புப் படகுகள் மற்றும் சிறப்பு மீட்பு குழுவினர் கடலோர பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.

கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு புயல் பாதிப்புகள் குறித்து முன்னதாகவே விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களிலும் மருத்துவக்குழு தயார்நிலையில் உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அரசு அறிவித்துள்ளபடி பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக இயங்காது. மேலும் அரசு அறிவித்துள்ள அறிவிப்பினை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து தங்களை புயல் பாதுகாப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை காவல்துறை தீயணைப்புத்துறையினர் நகராட்சி நிர்வகாம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மின்சாரத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியிலிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com