அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன்: விஜயபாஸ்கர்
வருமானவரித்துறை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது:
1. சோதனையின்போது நீங்கள் கொடுத்த வாக்குமூலம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
2. உங்களது எம்.எல்.ஏ விடுதி அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
3. அந்த ஆவணத்தில் குறிப்பிட்டபடி, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா முழுமையாக செய்யப்பட்டுவிட்டதா?
4. 89 கோடி ரூபாய் வெள்ளையா? கருப்பா? யாருக்கு சொந்தமானது அந்த பணம்?
5. உங்களுக்குச் சொந்தமானது என்றால் அதன் மூலம் என்ன? வரி செலுத்தியுள்ளீர்களா?
6. உங்களுக்கு உதவியவர்கள் யார் யார்?
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், வருமானவரித்துறை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்தேன், அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன் எனக் கூறினார்.