தமிழ்நாடு
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - பிப்.5ல் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிப்பு
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - பிப்.5ல் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிப்பு
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் 5ம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்துள்ளது. தமிழகத்தின் உரிமையை பறீக்காதீர்கள் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 5ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.