\
அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு

அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு

அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு
Published on: 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பும், சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. 

10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தன. 

திமுக, திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com