போட்டு தாக்கப்போகும் மழை.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கைபுதிய தலைமுறை

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் இன்று காலை மிக்ஜாம் புயலாக உருவெடுத்துள்ளது. இது மேலும் சென்னையில் இருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, “வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் மிக்ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை தொடரும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதன்படி,

மிதமான மழை : காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி

இடி மின்னலுடன் மழை: சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை ” வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காற்று வேகமாக வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. எனவே காசிமேட்டில் தடுப்பு தூண்டில் வளைவுகளை தாண்டி ராட்சத அலைகள் கொந்தளித்து வெளியே வருகின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அப்பகுதிகளைவிட்டு வெளியேறி வருகின்றன.

இதற்கிடையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் .”என்று உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com