\
அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Published on

சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com