\
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
Published on

கொடைக்கானலில் மதுபோதையில் தனியார் பள்ளி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவர் பள்ளிகுழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கியிருக்கிறார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையோரம் நின்றிருந்த நான்கு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த காவல் துறையினர் ஓட்டுநர் காளிமுத்தை கைது செய்ததோடு, பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

இதே பள்ளியை சேர்ந்த ஓட்டுநர்கள் ஏற்கனவே இருமுறை மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதனால் மது அருந்தாத ஓட்டுநர்களை நியமித்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com