\
ஆலந்தூர்: டிரைவர் கண் அயர்ந்ததால் பைக் மீது மோதிய பேருந்து! இளம்பெண் பரிதாப பலி!

ஆலந்தூர்: டிரைவர் கண் அயர்ந்ததால் பைக் மீது மோதிய பேருந்து! இளம்பெண் பரிதாப பலி!

ஆலந்தூர்: டிரைவர் கண் அயர்ந்ததால் பைக் மீது மோதிய பேருந்து! இளம்பெண் பரிதாப பலி!
Published on

சென்னை ஆலந்தூர் மெட்ரொ ரயில் நிலையம் எதிரே, இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பிற்பகல் 3 மணி அளவில் பல்லாவரத்தில் இருந்து கிண்டி நோக்கி அமைந்தகரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த தடம் 70 மாநகர பேருந்து ராஜேஸ்வரி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த எதிர்பாராத விபத்தில் இளம்பெண் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நேரிடக் காரணமாக இருந்த மாநகர பேருந்து ஓட்டுநரை கைது செய்து பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com