”அழகிரி சொன்ன கருத்துதான் தமிழக காங். கட்சியின் கருத்தும்” - கார்த்திக் சிதம்பரம்

”அழகிரி சொன்ன கருத்துதான் தமிழக காங். கட்சியின் கருத்தும்” - கார்த்திக் சிதம்பரம்
”அழகிரி சொன்ன கருத்துதான் தமிழக காங். கட்சியின் கருத்தும்” - கார்த்திக் சிதம்பரம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி சொன்னது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தும் என காரைக்குடி எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளார்.

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ப. சிதம்பரம் பேசியதாவது “ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி சொன்னது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தும்.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிறு, சிறு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அது அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடையே உள்ளது தான். ஆனால், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு ,மத சார்பின்மை போன்ற பெரிய கொள்கை விஷயங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.

அமெரிக்கத் தேர்தலுக்காக மோடி சென்று ஒருவருக்காக பிரச்சாரம் செய்ததும், இன்னொரு நாட்டு அரசியலில் தலையிடுவதும் ராஜாங்க உறவிற்கு ஏற்புடையது அல்ல. இதனை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com