"தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல மு.க.அழகிரி திட்டம்" முன்னாள் எம்.எல்.ஏ மதிவாணன்

"தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல மு.க.அழகிரி திட்டம்" முன்னாள் எம்.எல்.ஏ மதிவாணன்

"தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல மு.க.அழகிரி திட்டம்" முன்னாள் எம்.எல்.ஏ மதிவாணன்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளதாக அவரை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ மதிவாணன் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை சத்யசாய் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தன்னை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், மு.க.அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

சந்திப்புக்கு பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த மதிவாணன், “நான் தற்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறேன். நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒரு வாரத்தில் இறுதி முடிவு தெரிவிக்க இருப்பதாகவும், மதுரையை போல தமிழகம் முழுவதும் சென்று மாவட்ட வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அழகிரி தெரிவித்தார்” என்று மதிவாணன் தெரிவித்தார்.

முன்னதாக மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்திய மு.க.அழகிரி, இது குறித்து கூறும்போது, “ எத்தனையோ நபர்களை நான் அமைச்சர் ஆக்கினேன். ஆனால் ஒருவருக்கு கூட நன்றி இல்லை. கலைஞரை ஸ்டாலினுடன் ஒப்பிடுகின்றனர். அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞருக்கு இருக்கின்ற அறிவு இந்த உலகில் யாருக்கும் கிடையாது.

அவரின் பேச்சு, கலை, எழுத்து, இலக்கியம் யாருக்கு இருக்கு? அவரை போல உருவாக ஒருவர் பிறக்க வேண்டும்.ஆனால் அப்படியொருவர் பிறக்க முடியாது. ஆனால் அவர்கள் இன்று கலைஞரை மறந்து விடடு கட்சி நடத்துகின்றனர். ஆகையால் கலைஞரை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். கலைஞர்தான் நமது உயிர் மூச்சு.

“எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக்கினேன். கலைஞரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். சதிகாரர்களையும், துரோகிகளையும் எதிர்ப்பதற்கான முதல்படிக்கட்டு இந்தக் கூட்டம். திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் மன்றாடினர். திருமங்கலத்தில் பணம் கொடுத்து வென்றதாக பலரும் கூறினார்கள். ஆனால் கடும் உழைப்பால் வென்றோம்.

கலைஞர் தொடர்ந்து கேட்டுக் கொள்ளவே, திருமங்கலம் தேர்தலில் நாம் பணியாற்றி 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் இருந்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன், ஆனால் வலுக்கட்டாயமாக கலைஞர் எனக்கு கொடுத்தார்.

ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை கலைஞரிடம் இருந்து பெற்றுத் தந்தேன். மு.க.ஸ்டாலின் எனக்கு ஏன் துரோகம் செய்தார் எனத் தெரியவில்லை. கலைஞருக்குப் பிறகு நீதான் தலைவர் என ஸ்டாலினிடம் நான் கூறினேன். நான் என்ன தவறு செய்தேன். ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது.

விரைவில் முடிவை அறிவிப்பேன். அது நல்ல முடிவாக இருந்தாலும், கெட்ட முடிவாக இருந்தாலும் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com