பரோட்டா மாஸ்டருக்கு ரூ.18,000 சம்பளம்.... ஏ.கே.விஸ்வநாதன் சொன்ன நெகிழ்ச்சி அறிவுரை

பரோட்டா மாஸ்டருக்கு ரூ.18,000 சம்பளம்.... ஏ.கே.விஸ்வநாதன் சொன்ன நெகிழ்ச்சி அறிவுரை
பரோட்டா மாஸ்டருக்கு ரூ.18,000 சம்பளம்.... ஏ.கே.விஸ்வநாதன் சொன்ன நெகிழ்ச்சி அறிவுரை

மாணவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம் என்றும், எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் நன்றாக வளர முயற்சி செய்யுங்கள் எனவும் சென்னை மாநக‌ரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் யோகா பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், மாணவர்களை நல்வழிப்படுத்த யோகா பயிற்சி உதவுவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் போராட்டத்தை நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஒழுக்கமாக நடத்தினார்கள் என்றும் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களை கண்டிக்கும் நோக்கம் காவல்துறைக்கு இல்லை என்றும், நல்வழிப்படுத்துவதே நோக்கம் என்றும் குறிப்பிட்ட அவர் தனிமனித ஒழுக்கம் மாணவர்களுக்கு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், “நான் ஐஐடியெல்லாம் சென்று படிக்கவில்லை. பி.ஏ வரலாறு தான் படித்தேன். ஆனால் அதில் மிக ஆர்வமாக படித்தேன். ஐபிஎஸ் தேர்விலும் வரலாற்றில் தான் அதிக மதிப்பெண் எடுத்தேன். அதனால்தான் ஐபிஎஸ் பதவியும் கிடைத்தது. சமீபத்தில் பேப்பர் ஒன்றில் அருகருகே இரண்டு விளம்பரங்களை பார்த்தேன். சாப்ட்வேர் பயிற்சிக்கு ஆள் வேண்டும் என்று ஒரு விளம்ரபம். சம்பளம் ரூ. 8500. அடுத்த விளம்ரபத்தில் பரோட்டா மாஸ்டர் தேவை. சம்பளம் ரூ.18000. உங்களுடைய ஆர்வம் எதில் இருந்தாலும், அதில் கடுமையாக, கவனமாக உழைத்தால் அதில் அளவில்லாமல் வளரக்கூடிய வாய்ப்பு இக்காலத்தில் இருக்கிறது. உங்களுக்கு என்ன ஆர்வம் இருக்கிறதோ. அதில் நன்றாக வளர முயற்சி செய்யுங்கள்” என்றார்.

நிகழ்ச்சியுடன் முடிவில், சென்னை மாநகர காவல் ஆணையருடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com