\
சென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு !

சென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு !

சென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு !
Published on

சென்னையில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் காணப்பட்ட காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது.

தலைநகர் டெல்லியைவிட அதிக காற்று மாசுவால் சென்னை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்று மாசுவின் அளவு பெரிதும் குறைந்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஆலந்தூரில் 235 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு இன்று காலை 90 ஆக குறைந்திருந்தது. 

காற்றின் தரக்குறியீடு 238ஆக‌ இருந்த வேளச்சேரி பகுதியில் இன்று 78 ஆக குறைந்தது. மணலி பகுதியில் 128 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு 85 ஆக குறைந்தது. தரக்குறியீடு 50க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றதாகக் கருதப்படும் சூழலில், தற்போது காற்றின் தரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com