கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் பல்வேறு மேல் சிகிச்சைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காக ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வழக்கமான ஆம்புலன்ஸ்களைக் காட்டிலும் நோயாளிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல இந்த ஏர் ஆம்புலன்ஸ் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் வருகிற 25 ஆம் தேதி முதல் நோயாளிகளை அழைத்துச் செல்லும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.