தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இன்று ஆலோசனை

தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இன்று ஆலோசனை

தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இன்று ஆலோசனை
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

ஹைதராபாத்தில் கட்சித் தலைவர் ஒவைசியுடன் தேர்தல் வியூகம் குறித்து பேச உள்ளதாக அக்கட்சியின் தமிழக பிரிவு தலைவர் வக்கீல் அகமது தெரிவித்துள்ளார். ஒவைசியின் வழிகாட்டுதலின்படி தங்கள் கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும் வக்கீல் அகமது கூறியுள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தமிழக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விரும்புவதாகவும் இதற்கு வாய்ப்பில்லாவிட்டால் 3ஆவது அணியில் இடம் பெற்று களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சி அண்மையில் பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் 5 இடங்களை வென்று கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் தெலங்கானா, மகாராஷ்டிரா, பீகார் சட்டப்பேரவைகளில் இடம் பெற்றுள்ள இக்கட்சி தமிழகம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில பேரவை தேர்தல்களிலும் களம் காண முடிவு செய்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com