\
aidmk kpalaniswami files nomination in edappadi constituency TN Election 2026
எடப்பாடி பழனிசாமிஎக்ஸ் தளம்

TNElection2026 | எடப்பாடியில் கே.பழனிசாமி வேட்புமனு.. 8ஆவது முறையாக போட்டி!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
Published on

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இதுவரை 7 முறை போட்டியிட்டுள்ள கே.பழனிசாமி, 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 8ஆவது முறையாக எடப்பாடியில் போட்டியிடும் அவர், ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் எந்த மொழியையும் அவர் அனுமதிப்பார் எனவும் கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com