Jayalalithaa
Jayalalithaa web

எம்ஜிஆர் காலத்தில் ஹாட்ரிக் வெற்றி.. அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் வரலாறு!

தமிழக தேர்தல் வரலாற்றில் அதிமுக வென்ற தொகுதிகளையும் பெற்ற வாக்குச் சதவீதங்களையும் தற்போது பார்க்கலாம்.
Published on

1977இல் எம்ஜிஆர் சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிமுக 130 இடங்களில் வென்று 30.36% வாக்குகளைக் கைப்பற்றியது. 1980 தேர்தலிலும் அதிமுக 129 இடங்கள், 38.75% வாக்குகளுடன் ஆட்சியில் தொடர்ந்தது. 1984 தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிபெற்றது அதிமுக. இம்முறை அக்கட்சி 132 இடங்களில் வென்று 37.03% வாக்குகளை பெற்றிருந்தது.

MGR
MGRfile

எம்ஜிஆர் மறைவிற்குப் பின் 1989இல் நடந்த தேர்தலில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது. அதிமுக ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் ஜானகி அணி ஓரிடத்திலும் வெற்றிபெற்றன. இரு பிரிவுகளும் சேர்த்து 31.4% வாக்குகளை பெற்றன. ஒன்றிணைந்த அதிமுக 1991இல் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் வென்றது. அக்கட்சி 164 இடங்களில் வென்றதுடன் 44.39% வாக்குகளையும் கைப்பற்றியது. அதிமுகவின் வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி இதுதான்.

1996 தேர்தலில் அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. அப்போது அக்கட்சிக்கு 21.47% வாக்குகள் கிடைத்தன. 2001இல் 132 இடங்களில் 31.44% வாக்குகளுடன் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைத்தது. 2006 தேர்தலில் 61 இடங்களில் மட்டுமே வென்றதால் ஆட்சியை இழந்தது அதிமுக. அப்போது அக்கட்சிக்கு 32.64% வாக்குகள் கிடைத்தன.

jayalalithaa
jayalalithaa web

2011 தேர்தலில் அதிமுக 38.4% வாக்குகளுடன் 150 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் 3ஆவது அணி உருவாகி வாக்குகள் பிரிந்த நிலையில் மீண்டும் அரியணை ஏறியது அதிமுக. அப்போது அக்கட்சி 136 இடங்களில் வென்று 40.88% வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை ஜெயலலிதா நிறுத்தினார்.

அதிமுகவின் சிறிய கூட்டணிக் கட்சிகள் சில, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டன. இரட்டை இலை 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது இதுவே முதல்முறை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2021இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. அப்போது அக்கட்சி 33.29% வாக்குகளை வென்றிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com