\
சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் - அதிமுக வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் - அதிமுக வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் - அதிமுக வெற்றி
Published on

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 4 முறை நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த பதவிக்கு அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் என்பவரும் திமுக சார்பில் செந்தில் என்பவரும் போட்டியிட்டனர்.

அதிமுக - திமுக கூட்டணி தலா 8 வார்டில் சமமாக வெற்றி பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது நடைபெற்ற சிவகங்கை ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுக இடையே சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் அதிமுகவைச் சேர்ந்த சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com