\
பிளவுகளை கடந்து அதிமுக அம்மாவின் ஆட்சியை அமைக்கும் - சசிகலா ஆருடம்

பிளவுகளை கடந்து அதிமுக அம்மாவின் ஆட்சியை அமைக்கும் - சசிகலா ஆருடம்

பிளவுகளை கடந்து அதிமுக அம்மாவின் ஆட்சியை அமைக்கும் - சசிகலா ஆருடம்
Published on

பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என மதுரை விமான நிலையத்தில் சசிகலா தெரிவித்தார்.

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது...

புரட்சித் தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் மாயத்தேவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன் என்றவரிடம், தற்போதைய அதிமுகவில் பிளவுகள் உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா...
பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம் என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com