"அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்

"அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்

"அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் "தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி அமைத்தோ அதே போன்று தான் அமையும். தேர்தல் வரும் போதுதான் எந்த கட்சிகள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்று தெரியும்" என்றார் ஜெயக்குமார்.

முன்னதாக திருவாரூரில் பேசிய முதல்வர் பழனிசாமி "பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே ?" என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் வரும்போதும் தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com