
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மேலும், “எஸ்.பி.வேலுமணி இடங்களில் சோதனை அரசியல் பழிவாங்கும் செயல். சோதனைகளை அதிமுக அச்சமின்றி உறுதியாக சந்திக்கும். பயமுறுத்தும் செயலாகவே ரெய்டு நடத்தியுள்ளனர்” என்றார்.