நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் அறிவிக்க இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுவிட்டதால், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.
வரும் 10 ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25,000 செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித் துள்ளது.

