\
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?

அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?

அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
Published on: 

தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்று பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் கூறியதாவது , ‘’பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது. சசிகலாவினால் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தையை காலதமாதம் செய்யாமல் அதிமுக உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தான் பேச்சுவார்த்தை எனக் கூறுவது காலதாமதத்திற்கு வழிவகுத்து விடும்’’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com