அதிமுக-வின் 3 சர்ச்சை பொதுக்கூட்டங்களும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும்!

அதிமுக-வின் 3 சர்ச்சை பொதுக்கூட்டங்களும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும்!
அதிமுக-வின் 3 சர்ச்சை பொதுக்கூட்டங்களும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளும்!

தலைமை தொடர்பாக அதிமுகவில் எப்போதெல்லாம் பொதுக்குழு கூட்டங்கள் நடந்துள்ளன, அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது பற்றிய சிறு தொகுப்பு இங்கே.

2016 டிசம்பர் பொதுக்குழு

வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக தேர்வானார். அதிமுக 2 அணியாக பிளவு பெற்றது. ஓபிஎஸ் அணி - சசிகலா அணி என இரு அணிகள் பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் ஈபிஎஸ் முதல்வராகிறார். பின் அதிமுக மீண்டும் 3 அணியாக பிளவு பெற்றது. ஓபிஎஸ் அணி - ஈபிஎஸ் அணி - சசிகலா அணி என மூன்று அணிகளாக உருவானது.

2017 ஆகஸ்ட் பொதுக்குழு கூட்டம்

வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், அதிமுகவில் 3வது முறையாக ஒற்றைத்தலைமை சர்ச்சை தீவிரப்படுத்தப்பட்டது.

2022 ஜூன் 23 நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம்

23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com