இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
*அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் சர்ச்சை நீடிப்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினருமே பயன்படுத்தக் கூடாது.
* இருதரப்பினருக்கும் நியாயமாகவே நடந்து கொள்ள இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவது இடைக்கால உத்தரவே.
* ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படாத ஒரு சின்னத்தை இரு தரப்பினரும் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தை மார்ச் 23ம் தேதி காலை 10 மணிக்கு அணுகலாம்.
* இருதரப்பினரும் தங்களிடமுள்ள கூடுதல் ஆவணங்களை ஏப்ரல் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.