தமிழ்நாடு
’இன்றைய முதல்வரே.., அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே’ - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.!
’இன்றைய முதல்வரே.., அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே’ - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.!
’அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து’ தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது
அதிமுகவில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் இபிஎஸ் - ஒபிஎஸ் இடையே யார் அடுத்த யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் தலைமகனே, ஏழைகளின் துயர் துடைக்க வந்த தூயவனே, மாணவர்களின் வாழ்க்கைக்கு ஒளியாய் வந்த ஒளிவிளக்கே, மக்களின் நல்லவனே, எதிரிகளின் வல்லவனே, தமிழகத்தின் இன்றைய முதல்வரே, அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளராக எங்களுடைய வாழ்த்துகள் என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர்.