அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்புமுகநூல்

மாநிலங்களவைத் தேர்தல் | வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக.. கூட்டணி கட்சிகளுக்கு ’நோ’.. பின்னணி என்ன?

அதிமுகவும் தனது மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Published on

கடந்த 2019 ஜூலை 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்களான வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க வைகோ, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.

இவர்களின் மாநிலங்களவை எம்பிக்கான பதவிக்காலம் வருகின்றன ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான, வேட்பு மனுதாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் வேட்புமனுவை திரும்பபெற ஜூன் 12ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக சார்பில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுக சார்பில் இரண்டு  மாநிலங்களவை  உறுப்பினர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் திமுக சார்பில், தி.மு.க. வேட்பாளர்களாக

1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,

2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்

3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோரும்

மேலும், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது அதிமுகவும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்படி, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கே.பி.முனுசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com