மதுசூதனன் நீக்கம்: சசிகலா நடவடிக்கை

மதுசூதனன் நீக்கம்: சசிகலா நடவடிக்கை
மதுசூதனன் நீக்கம்: சசிகலா நடவடிக்கை

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக-வினர் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக-வின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த மதுசூதனன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர், அவைத் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனன் நீக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக-வின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் வி.கே.சசிகலாவே வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com