பதவிகொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

பதவிகொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை
பதவிகொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அரசியல் ஆலோசகராக ஓ. பன்னீர்செல்வம் நியமித்த சில மணி நேரத்திலேயே, அவரை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது பொதுவெளியில் சர்ச்சைக்கும் கேள்விக்கும் உள்ளாகியுள்ளது.

நேற்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பிடமிருந்தும் இருவேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில் கழக அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் , கழக அரசியல் ஆலோசகராக நியமிப்படுவதாக அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ்-ன் அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில், `கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுகிறார்’ என தெரிவித்திருந்தார் இபிஎஸ்.

இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவினரிடனான இந்த சலசலப்பு அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது. இவர்களுக்கு இடையே இருக்கும் பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனு, அந்தப் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான `அதிமுக பொதுகுழுவை அங்கீகரித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு;வை வரும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

இதையும் படிக்க: "விலக்கு அளிக்கும் பிரிவில் ஈஷா மையம் எப்படி வந்தது?" - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com