\
‘மாநிலங்களவைக்கு பைபை’- கண்ணீர் மல்க விடைபெற்றார் மைத்ரேயன்

‘மாநிலங்களவைக்கு பைபை’- கண்ணீர் மல்க விடைபெற்றார் மைத்ரேயன்

‘மாநிலங்களவைக்கு பைபை’- கண்ணீர் மல்க விடைபெற்றார் மைத்ரேயன்
Published on

"3 முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார் ஜெயலலிதா" என்று கூறி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கண்ணீர் மல்க மாநிலங்களவையிலிருந்து விடைபெற்றார்.

அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் இன்று மாநிலங்களவையில் உரை நிகழ்த்தி விடைபெற்றனர். 

அப்போது பேசிய மைத்ரேயன், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். மேலும் அவர், “எனது தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து 3 முறை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார். எப்போதும் அவர் மீது விசுவாசத்துடன் இருப்பேன். மேலும், எனக்கு வழிகாட்டியாக இருந்த அருண் ஜெட்லி விரைவில் உடல்நலம் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com