சட்டசபை : கருப்பு கைப்பட்டையுடன் வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்.. சபாநாயகர் கிண்டலாக சொன்ன வார்த்தை!
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரும் 17ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், வால்பாறை எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று தங்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர். அதிமுகவினர் கருப்புப்பட்டை அணிந்துவந்த நிலையில் ரத்த அழுத்தம் உள்ளதா என சபாநாயகர் அப்பாவு கிண்டல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை" என வலியுறுத்த, "செங்கோட்டையன் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார்; புறவழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் பணிகள் தொடங்கும்" என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று தங்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர். அதிமுகவினர் கருப்புப்பட்டை அணிந்துவந்த நிலையில் ரத்த அழுத்தம் உள்ளதா என சபாநாயகர் அப்பாவு கிண்டல் செய்தார்.கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க நீண்டநாட்களாக கோரிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
செங்கோட்டையன் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார்; புறவழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் பணிகள் தொடங்கும்
அமைச்சர் எ.வ.வேலுஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை" என வலியுறுத்த, "செங்கோட்டையன் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார்; புறவழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் பணிகள் தொடங்கும்" என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை" என வலியுறுத்த, "செங்கோட்டையன் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார்; புறவழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் பணிகள் தொடங்கும்" என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.