அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை

அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை
Published on

அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.

அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தினார். இதன் பின்னர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசிய சசிகலா, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com