மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
Published on

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பான அரசு ஆணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதன்மூலம் இந்தப் பதவிகளுக்கு இனி நேரடி தேர்தல் இல்லை. ஆகவே இந்தப் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com