'தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தம் கூடாது' - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்

'தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தம் கூடாது' - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்
'தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தம் கூடாது' - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். அதன்படி, 3 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது வாதாடிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ''பொதுக்குழு அஜெண்டா இதுவரை வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இச்சூழலில் கட்சியினரிடம் கலந்தாலோசனை இல்லாமலேயே ஒற்றைத் தலைமை விவாதங்கள் தொடங்கியுள்ளன. ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளபோது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஒற்றைத் தலைமை குறித்து செயற்குழுவும் எதுவும் பேசவில்லை. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது. தற்போது ஒற்றைத் தலைமை என திருத்தம் கொண்டு வர உள்ளனர். பொதுக்குழு வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது'' என சண்முகம் வாதிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடுகையில், ''2021ல் கட்சி தேர்தல் மூலம் ஒருமனதாக இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுள்ளது. ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்தது. நாளை பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும். நேற்று இறுதி வரைவு தீர்மானம் கிடைத்தது. அதன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படமாட்டேன். நீதிமன்றம் என் தரப்பு உத்தரவை பதிவு செய்துகொள்ளலாம். சட்டவிதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்ற மனுதாரரின் அச்சம் குறித்து 23 தீர்மானங்களில் ஏதும் இல்லை. இனியும் புதிய தீர்மானங்களை (கட்சி)  சேர்க்கக் கூடாது'' என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com