அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பா? - பதிலளித்த செல்லூர் ராஜூ

அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பா? - பதிலளித்த செல்லூர் ராஜூ
அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பா? - பதிலளித்த செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெரியகுளம் பண்ணை வீட்டில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவருடன் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஒ.பன்னீர் செல்வம்...

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு திமுகவின் பணபலம் அதிகார பலம் உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக அதிமுகவின் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது. அதனால் சோர்வடைய வேண்டாம். அந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற்ற நீங்கள் மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து பாகுபாடின்றி அனைவரும் மக்கள் பணியாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று மென்மேலும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது... மதுரை மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை மதியம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பது குறித்து அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவு தான் முக்கியம் இதில், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என ஏற்கெனவே தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com