EPS-க்கு ஷாக் கொடுத்த செய்தி? நிர்மலா சீதாராமனுடன் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் திடீர் சந்திப்பு.?
எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துக்கும் முக்கிய தலைவர்களை பாஜக மேலிடம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய சம்பவம் கவனம்பெற்று வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே பாஜவுடன் கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறியது அதிமுக.இதனையடுத்து பாஜகவுக்கும்- அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
இப்படியான சூழலில் தான், கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. இருவரின் சந்திப்பும் அரசியல் களத்தில் பேசுபொருளானது. மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைய போகிறது என பலரும் விமரித்து வந்தனர்.
"தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து தான் பேசினேன்” என முற்றபுள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி..
எடப்பாடி பழனிசாமியை தொடந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைதொடர்ந்த்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களாவை எம்.பியுமான தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அதே சமயம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிவி சண்முகம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் தான், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் விமர்சித்து வரும் கே.சி பழனிசாமி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிமசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும், முக்கிய தலைவர்களை குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இப்படி தொடர்ந்து அதிமுகவின் முக்கிய தலைவர்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து வரும் சம்பவம் தமிழக அரசியல் களத்தில பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாறி மாறி பாஜக மேலிடம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருவது அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் எடப்பாடி பழனிமசாமி இல்லாத அதிமுக புதிய அணியை உருவாக்க பாஜக திட்டம் போட்டு வருவதாகவும் அதற்கான விடை விரைவில் தெரிய வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..