”சசிகலா ஒரு செல்லாக்காசு; அவர் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை”- விளாசி தள்ளிய அதிமுக தலைவர்கள்!

அதிமுகவில் ஜாதி அரசியல் நடைபெறுகிறது என்றும் ஜாதி அரசியலை தொண்டர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் விமர்சித்த சசிகலாவுக்கு எதிராக அதிமுக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே காணலாம்.
சசிகலா
சசிகலாpt web

சென்னையில் நேற்று போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ”அதிமுகவில் எனது எண்ட்ரி தொடங்கிவிட்டது. இதுவரை பொறுமையாக இருந்தேன் தற்பொழுது நல்ல நேரம் தொடங்கிவிட்டது. அதிமுகவில் ஜாதி அரசியல் நடைபெறுகிறது. ஜாதி அரசியலை தொண்டர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார். மேலும் பல்வேறு கருத்துக்களையும், தற்போதைய தலைமை குறித்த விமர்சனங்களையும் முன் வைத்தார்.

சசிகலா
சசிகலாpt web

சசிகலாவின் பேச்சிற்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மலிவான பிரசாரத்தை சசிகலா செய்து வருகிறார். அம்மா இருக்கும்பொழுதே சசிகலா கட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார் என்று அனைவருக்கும் தெரியும். சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து சமூகத்திற்கும் சம உரிமை வழங்கும் கட்சியாக அதிமுக விளங்குகிறது” என்றார்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும் பொழுது, “ஒருசிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்லும் சசிகலா ஒரு செல்லாத காசு. அவரைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பாஜக, பாமகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதிமுக வாக்கு வங்கி நன்றாக உள்ளது.” என்றார்

அமமுக தலைவர் டிடிவி தினகரனிடம், ”மீண்டும் அதிமுகவில் இணைவீர்களா? ”என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு

2017ல் அமமுக முன்னேற்ற கழகம் எதற்காக துவங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதே சூழ்நிலைதான் இப்பொழுதும் நிலவி வருகிறது. அதிமுகவில் அராஜகம் பிடித்த எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையில், அதிமுகவுடன் அமமுக சேராது.” என்று பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com