’பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க கனிமொழி..’ - விமர்சித்த அதிமுக ஐடி விங்!
திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக அதிமுக ஐடி விங் கடும் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை விமர்சித்து, அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
திமுக மகளிர் அணி மாநாட்டில் வெளியான கருத்துகளுக்கு எதிராக, அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் திமுக எம்பி கனிமொழியை குறிவைத்து கடும் விமர்சனப் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் எனக் கூறி, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலேயே உடனடியாக நிறைவேற்றப்பட்டதாகவும், திமுக வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதாகவும் அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
2026இல் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு மாதம் 2000ரூபாய் வழங்கப்படும் வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெல்லும் பெண்கள் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை மீண்டும் ஏமாற்றவேண்டாம் என திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முந்தைய வாக்குறுதிகளை மக்கள்மறக்கவில்லை என்றும் அதிமுக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

