எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி தினகரன் பாராட்டு

எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி தினகரன் பாராட்டு
எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி தினகரன் பாராட்டு

அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்தார்.

திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...

வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுக கூறியதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலேயே திமுக ஆட்சி உள்ளது.

அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் திமுகவின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றவரிடம் அதிமுக செயல்பாடு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு...

அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாகத் தான் செயல்படுகிறார்கள். அதற்காக பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். திமுகவை எதிர்த்து தேவையானதுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்துறாங்க. இந்தி திணிப்பை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசை விடியல் ஆட்சி எனக் கூறுவது தவறு. இருண்ட ஆட்சி எனக்கூற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com