\
‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும்போது பிரளயம் வரும்’ - விஜய் பிரபாகரன்

‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும்போது பிரளயம் வரும்’ - விஜய் பிரபாகரன்

‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும்போது பிரளயம் வரும்’ - விஜய் பிரபாகரன்
Published on

அதிமுக, திமுகவிற்கு மாற்று தேமுதிக தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “ தமது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு கொடுத்தவர், வறுமை மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறிய ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும் தான்.

மக்கள் ஆதரவு தராததால் தேமுதிக கூட்டணி அமைத்தது. அதிமுக, திமுகவிற்கு மாற்று தேமுதிக. செல்லும் பாதை வேறாக இருந்தாலும் இலக்கை அடையாமல் விஜயகாந்த் ஓயமாட்டார். விஜயகாந்த் தோற்று விட்டால், காமராஜர் தோற்றதை கூறுவது போல நல்ல மனிதரான விஜயகாந்த் தோற்று விட்டார் என வரலாறு கூறும்.வெகு விரைவில் விஜயகாந்த் தரிசனம் உள்ளது. அத்திவரதர் போல விஜயகாந்த் வரும்போது பிரளயம் வரும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com