மதுசூதனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - அதிமுக

மதுசூதனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - அதிமுக

மதுசூதனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் - அதிமுக
Published on
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிமுக தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு, நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுசூதனின் உடல்நிலை தொடர்பாக சில வதந்திகள் பரவிய நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிமுக தெரிவித்துள்ளது. மேலும் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அதிமுக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com