தமிழ்நாடு
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சில தீர்மானங்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், சில தீர்மானங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும் வகையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முக்கியமாக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

